• 1953 – மு.க.ஸ்டாலின் பிறப்பு

  1953 மார்ச் 1 அன்று பிறந்த மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி-தயாளு அம்மாள் ஆகியோரின் மூன்றாவது மகனாவார்.

  Date: 01/31/1953

 • 1967 – அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது.

  14 வயதில் பள்ளி மாணவராக இருந்தபோது மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1967 தேர்தலில் அவர் தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்தார். அவருக்குக் கீழ் குழந்தைகள் சீர்திருத்த சங்கம் உருவாயிற்று. ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் அணியின் எளிமையான தொடக்கம் நடந்தது. மாணவர்களுக்கும் இளம் வயதினருக்குமான தெருமுனைக் கூட்டங்கள் பின்னாளில் தமிழ்நாட்டின் மிகவும் மதிக்கப்பட்ட கட்டுப்பாடான இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக உருவான அமைப்புக்கு அடித்தளமிட்டன.

 • 1976 – அவசரநிலையை எதிர்த்ததற்காக மிசா சட்டத்தின் கீழ் கைது.

  உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 31 ஜனவரி 1976 அன்று அவர் கைது செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் வயது 23. அப்போதைய அரசு அவரை அடித்து உதைத்து அடக்குவதற்கு செய்த அனைத்து முயற்சிகளையும் மீறி தனது கொள்கையில் உறுதியாக நின்றவராக மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கைதியாக அவரது பெயர் தேசிய நாளேடுகளில் தலைப்பு செய்தியாகியது.

  Date: 01/31/1976

 • 1982 – தி.மு.க. இளைஞர் அணி தலைமையேற்பு

  1984ல் அவர் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார், இன்று இளைஞர் அணி அவரது தலைமையில், இளைஞர் அணி அதன் அமைப்பு வலிமைக்கும், இளைஞர்களை சென்றடையப் புதுமையான வழிமுறைகளுக்கும், மக்களுக்கு சேவை செய்வதில் முழுமையான அர்ப்பணிப்புக்கும் சிறப்புமிக்கதாகத் திகழ்கிறது. தலைமைப் பண்பு, பொதுக்கூட்ட உரைகள், அமைப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு திறமைகள் ஆகியவற்றில் அணியினர் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். மாநிலத்தில் மிகப்பெரிய இளைஞர் அமைப்பில் பங்குவகிப்பது அதன் உறுப்பினர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

 • 1989 – சட்டமன்ற உறுப்பினராக (ஆயிரம் விளக்கு).

  சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 1989ல் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது முதல் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நான்கு முறை 1989, 1996, 2001, 2006ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 • 1996 – சென்னை மேயராகத் தேர்வு

  1996-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் முதல் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பெருமை பெற்றார். 1996ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் மேயராக இருந்த காலத்தில் அவர் எடுத்த முக்கியமான முன்முயற்சிகளில் ஆரம்ப சுகாதார மையங்கள், சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள், பழைய கால்வாய்களைத் தூர்வாருதல் ஆகியவையும் அடங்கும்.

  Date: 10/01/1996

 • 2001 – சென்னை மேயராக மீண்டும் தேர்வு

  2001ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தமிழ் நாட்டில் அப்போதைய ஆளுங்கட்சி சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி அவரை வெளியேற்ற இடையறாத அரசியல் பிரச்சாரத்தை நடத்தியதன் காரணமாக சட்டத்தை மதித்து அவர் ராஜினாமா செய்தார். எந்தவிதமான ஆரவாரமுமின்றி அவர் பதவியைவிட்டு இறங்கி, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து சென்னை மாநகர மக்களுக்காகப் பாடுபட்டார்.

  Date: 10/01/2001

 • 2003 – தி,மு,க, துணைப் பொதுச் செயலாளராக தேர்வு

  சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் 12வது பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  Date: 06/02/2003

 • 2006 – உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

  தமிழ் நாடு அரசில் 13 மே 2006 அன்று மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்ட்து. 2006 முதல் 2011 வரை அவரது பதவி காலத்தில், அவர் மகளிர் சுய உதவிக் குழுக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மின்னணு நிர்வாக மையங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்றவற்றை நிறைவேற்றினார்.

  Date: 05/13/2006

 • 2008 – தி.மு.க.பொருளாளராகத் தேர்வு

  மு.க.ஸ்டாலின் மீது கட்சியும் தலைமையும் நம்பிக்கை வைத்து 2008ஆம் ஆண்டு தி,மு,க. பொருளாளராகத் தேர்வு செய்தது.

  Date: 12/27/2008

 • 2009 – தமிழ் நாட்டின் துணை முதல்வராக நியமனம்

  தமிழ் நாடு வரலாற்றில் முதலாவதாக மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பதவியை வகித்தார். அவர் 29 மே 2009 முதல் 15 மே 2011 வரை இப்பதவியை வகித்தார்.
  கழிவுநீர், வெள்ள நீர் அகற்றல், சுகாதாரம், குப்பை அகற்றல், பூங்காக்களை அழகுபடுத்தல், நீர்வழிகளை மீட்டல், துணை நகரங்கள் போன்ற நகர்ப்புற சவால்களுக்கு தீர்வுகாண அவரது முன்முயற்சிகள் தமிழ்நாடு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அவரது நிர்வாகத் திறமையும் தொலைநோக்குப் பார்வையும் தமிழகத்தில் பொற்காலத்தைப் படைக்க கலைஞர் அவர்களின் சீர்மிகு வழிகாட்டுதலின் கீழ் இணைந்து பணியாற்றிய கட்சி, அரசு மற்றும் மக்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

  Date: 05/29/2009

 • 2011 – கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு

  தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று 13 மே 2011 அன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  Date: 05/13/2011

2015 மு.க.ஸ்டாலின் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.