தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது நிர்வாகத் திறனுக்காகவும், அனைவரும் எளிதில் அணுகக் கூடியவர் என்பதாலும், பலருடையப் பாராட்டுக்களைப் பெற்றவர். இயல்பாகவே தனக்குள்ள திறமைகளாலும், பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையாலும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், அடிப்படையிலேயே தலைமைப் பண்புகளைப் பெற்றவராகவும், அனைவரின் பாராட்டுதலுக்கு உரியவராகவும் திகழ்கிறார்.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றி, தேசிய அளவில் புகழ்பெற்றுள்ள பல தலைவர்களின் பார்வைகள், கருத்துக்கள் மற்றும் பாராட்டுரைகள்.. உங்கள் பார்வைக்காக;

stalin

ஸ்டாலின் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து தொகுதி – தொகுதி என்று அடிக்கடி சென்று விடுபவர். தனது தொகுதியையும், தனது சொந்த வீட்டையும் வேறுபடுத்திப் பார்க்காதவர். சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் சென்னையிலே இருக்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும், அதிலே ஒரு நாள் தொகுதிக்குச் சென்று ஒரு சுற்றுச் சுற்றி விட்டுத்தான் திரும்புவார்.

ஸ்டாலினை 2006ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக்கினேன். அயராத உழைப்பாலும், இடையறாத களப்ணியாலும், “ உள்ளாட்சியில் நல்லாட்சி “ என்று நற்பெயர் எடுத்தார்.

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராகப் பொறுப்பேற்று, ஸ்டாலின் சென்னை மா நகரத்தைச் “ சிங்காரச் சென்னை “ ஆக்கிடக் கனவு கண்டவர். கனவு நனவாக நாள்தோறும் உழைத்தவர். மா நகராட்சிப் பணிகள் அனைத்தையும் தனது நேரடிக் கண்காணிப்பில் நிறைவேற்றியவர். மழை என்றால் ஓடி ஒதுங்கி விடாமல், மழையோடு மழையாகப் பணி புரிந்தவர். குடி நீர்ப் பிரச்சினையா, கழிவு நீர் அடைப்பா, குப்பை அகற்றப் படவில்லையா – என்று மா நகர மக்கள் பிரச்சினை எதுவானாலும், பிரச்சினையைக் கண்டு பின்வாங்காமல் பிடறியில்பட ஓடி ஒளிந்து விடாமல்; பிரச்சினையின் பிடறியைப் பிடித்து உலுக்கி நேருக்கு நேர் நின்று தீர்வு கண்டவர்.

கழகத்தின்பால் ஈடுபாடு கொண்ட இளைஞனாக, இளைஞரணி வீரனாக, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக, பொருளாளராகப் படிப்படியாக ஸ்டாலின் உறுதியாக உயர்ந்து வருவதையும் பார்க்கிறேன். அறிவாலயப் பணி என்றாலும், அமைச்சர் பணி என்றாலும், சிறைச்சாலைக்குச் செல் என்றாலும், சித்திரவதை தான் என்றாலும் – அனைத்தையும் “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை “ என அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டு அமைதி காப்பவர் ஸ்டாலின்.

“ என்னை விடக் கழகம் பெரிது “ என எண்ணுபவன் நான் என்பதை ஸ்டாலின் அறிந்திருக்கும் காரணத்தால் தான்; என்னைத் தந்தை என்பதை விடத் தலைவர் எனச் சிரமேற்கொண்டு, கழகம் – கழகம் என்றேச் சுற்றிச் சுழன்று வருகிறார் !

தலைவர் கலைஞர்

இவரின் இதயம் கருணையின் ஊற்று – (தந்தையாரின் பெயரையொட்டி மலர்ந்ததோ !) இரக்கத்தின் அருள்பா. மனித நேயத்தின் முழு மலர்ச்சி ! பல எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும். குருதிக் கொடை, கண் கொடைகளையும் தாண்டி தம் இணையரையும் இணைத்து உடற் கொடைக்கும் ஒப்புதல் செய்ததன் மூலம் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்று விட்டார்.
தந்தயின் புகழொளியால் பெருமை கொள்ளும் உரிமயும் – வாய்ப்பும் பிறப்புரிமையிலே பெற்றிருப்பினும், தகுதியினால் பெருமை கொண்டு, தியாகத்தால் உரிமை பெற்று, தொண்டினால் பதவி பெற்று, சாதனையால் புகழ் பெற்றவர் ஸ்டாலின். எண்ணித் துணிவது, துணிந்தை உரைப்பது, உரைப்பதைச் செய்வது, விளைவினை ஏற்பது என்னும் பழக்கத்தால் பொதுத் தொண்டில் வெற்றி நடை போடுபவர்.

திராவிடர் கழகத் தலைவர் – திரு. கி. வீரமணி
stalin

stalin

தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் வாழ்நாள் முழுவதையும், தமிழக மக்களின் சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.
கடந்த 40 ஆண்டுகளாக மதிப்புக்குரிய பலவகை சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தனது சிறப்பான பணிகளால் தமிழக மக்களை ஒருங்கிணைத்து, அவர்களைக் கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி வருவதன் மூலம், தமிழ்நாட்டின் துணை முதல்வர், அமைச்சர், சென்னை மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர், அரசியல் தலைவர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், நடிகர் மற்றும் சமூக சேவையாளர் உள்ளிட்ட பல பெருமைப்படத்தக்க பொறுப்புகளைப் பெற்றவர்.
தமிழ்நாட்டின் நகர மற்றும் கிராம வளர்ச்சிகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது.

எம். ஹமீத் அன்சாரி - மேதகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர்

அன்புள்ள டாக்டர் ஸ்டாலின்,
தங்கள் 60வது பிறந்த தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த இனிய தினத்தில் நீடித்த ஆயுளும், மகிழ்ச்சியும் பெற்று, தமிழக மற்றும் இந்திய மக்களுக்குச் சேவை செய்யும் நீண்டதொரு பொதுவாழ்வைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மேதகு முன்னாள் இந்தியப் பிரதமர் – டாக்டர் மன்மோகன் சிங்
stalin

stalin

திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதும், அதிகாரம் இல்லாமல் எதிர்தரப்பில் இருந்தபோதும், தனது தலைமைப் பண்பையும், நிர்வாகத் திறமையையும், எல்லையில்லாத ஆற்றலையும் தொடர்ந்து வெளிப்படுத்தி கணிசமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்–திருமதி சோனியா காந்தி

நமை ஈன்ற நம் அன்னை இனத்துக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை நம் உயிரினும் உயர்ந்தது; நமது வாழ்வினும் மேலானது. அதை உளம் கொண்டு செயல்படுவதினும் நமக்கு வேறோர் கடமை அமைவதற்கில்லை. அதைத் தெளிந்த, உணர்ந்த, உறுதிகொண்ட இளைஞராக இருந்து வளர்ந்து வருபவரே தம்பி மு.க.ஸ்டாலின் ! மணிவிழா காணும் இளைஞர் ஸ்டாலின் நீடு வாழ்க என வாழ்த்துகிறேன். அவரது துணைவியும் செல்வங்களும் வாழ்க ! பீடும் பெருமையும், புகழும் பெரு வாழ்வும் பெற்று வாழ்க என வாழ்த்துகிறேன்.

கழகப் பொதுச் செயலாளார் – பேராசிரியர் அன்பழகன்
stalin

stalin

தகுதி வாய்ந்த நிர்வாகியாகவும், குறை கூற முடியாத சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது புரட்சிகரமான கருத்துக்களால், தமிழ்நாட்டு மக்களுக்கு மகத்தான சேவைகளை செய்து வருகிறார்

இந்திய வேளாண்மைத் துறை – உணவு உற்பத்தி அமைச்சர் – மாண்புமிகு சரத் பவார்

ஸ்டாலின் திறமையானவர்; கெட்டிக்காரர். அவருடைய தந்தையைப் போலவே அவரும் வெற்றி பெறுவார்.

பேரறிஞர் அண்ணா
stalin

stalin

திரு மு.க. ஸ்டாலினை நான் நன்கு அறிவேன். சென்னையில் நடைபெற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவின் போது, அவர் தலைமையில் நடைபெற்ற இளைஞர் அணியின் ஊர்வலத்தைப் பார்த்து வியந்து போனேன். அவர் பாராட்டுக்குரிய ஒரு வளரும் தலைவர்.

முன்னாள் பிரதமர் – மாண்புமிகு வி.பி.சிங்

மு.க.ஸ்டாலின், தமிழ் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருந்து, தனது பங்களிப்புகளை சிறப்பாக வழங்கியுள்ளார். குறிப்பாக இளைஞர்களையும், சமூகத்தின் விளிம்பில், ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களையும் முன்னேறச் செய்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மக்களவை சபாநாயகர் – வணக்கத்துக்குரிய மீரா குமார்
stalin

stalin

என்றும் இளமையின் எழில் தோற்றம், எஃகு உள்ளம், சிந்தனையில் செழுமை, செயலில் வளமை, சொல்லில் உண்மை என்ற அற்புதக் கலவையில் அரிய மாமனிதராய் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

வாரிசு அரசியல் என் கின்ற வார்த்தைப் பிரயோகம் திரு. ஸ்டாலினுக்கு பொருந்தாது. மிக இள வயதிலேயே அரசியல் களத்தின் நுழைந்து சாதாரண தொண்டனாக பணியாற்றி, பின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று அவசர நிலை காலத்தில் கொடும் சித்ரவதைகளை அனுபவித்து, சிறை சென்று தனது தகுதியின் காரணமாக பதவி பெற்று, உழைத்த உழைப்பின் காரணமாக உயர்ந்த பதவியைப் பெற்றுத் திகழ்கின்ற திரு. ஸ்டாலின் அவர்களுக்கு, புகழ் பெற்ற ஒரு அரசியல் தலைவரின் மகனாகப் பிறந்தது என்பது ஒரு கூடுதல் தகுதிதான்.

பா.ஜ.க. – திரு. இல. கணேசன்
stalin

stalin

அரசின் அடக்குமுறையில், உருக்கி, வார்த்து உருவாக்கப்பட்ட இளம் தலைவர்தான், இன்று கட்சி மற்றும் அரசியல் அதிகார பீடங்களில், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பினால் படிப்படியாக உயர்வுகளைப் பெற்றிருக்கிறார்.
விடைகள் பொதிந்த வினாக்களுக்கு உரியவராக விளங்குபவர்தான் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் !
பதவியும், அதிகாரமும் அவரது இயல்பான பண்புகளைப் பாதிக்கவில்லை. பக்குவமும், முதிர்ச்சியும், பெருந்தன்மையும் அவர், ‘ தலைவரின் பிள்ளை ‘ என்பதை உறுதிப்படுத்தும் பண்புகளாக சுடர்விடுகின்றன. அவர் உழைப்பில், அர்ப்பணிப்பில் அது புகழொளி வீசும் ! அதனை எதிர்காலம் பேசும் !
பெரிய இடத்துப் பிள்ளை என்பதனால் அவர் ஒரே நாளில் உச்சாணிக்குப் போய்விடவில்லை என்பதை அவருடைய வரலாற்றுச் சுவடுகள் விவரிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலின் திருப்புமுனைக்கான அரசியல் சக்தியாக அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
சலிப்பின்றி, சோர்வின்றி அவர் ஆற்றி வரும் களப் பணிகள் கட்சியிலும், சமூகத்திலும் அவருக்கு சிறப்பிடத்தை உறுதிப் படுத்தியிருக்கின்றன.
கடந்த 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்த்லின் போது, அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய உணர்வுகளை மதித்து தலைவரிடத்தில் கலந்துப் பேசி கூடுதல் இடங்கள் பெற்றுத் தந்தது அவரது பெருந்தன்மையும், ஜனநாயகப் பண்பையும் வெளிப்படுத்தியது. அவர் எடுத்துக் கொண்ட முனைப்பும், முயற்சியும் அவரது தலைமைப் பண்பின் வெளிப்பாடேயாகும்.
கலைஞரைப் போல அனைவரையும் மதிக்கின்ற பெருந்தன்மையும், பிறரின் உணர்வுகளை மதிக்கிற ஜனநாயகப் பண்பும் அவரிடத்தில் மிகுந்தும், செழித்தும் ஒளி வீசுகின்றன.

தொல். திருமாவளவன்:

எந்த சலனமுமில்லாமல், அமைதியாக சிரித்துக் கொண்டே சில இக்கட்டான சூழ் நிலைகளைப் பொறுப்புணர்ச்சியோடு அவர் கையாள்வதைப் பார்த்து நான் பிரமித்து இருக்கிறேன்.

திரைப்பட நடிகர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
stalin

stalin

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரசியல் அழகும், ஆழமும், ஆயுளும் சேர்த்த, அதே சிற்பிகளில் சிலர், இவர் அறிவையும் செதுக்க நேர்ந்ததும், வாழ்க்கைப் போராட்டங்களும், அரசியல் அவமானங்களும் கூட இந்த வியத்தகு பொறுமைக்கும், பெருமைக்கும் காரணங்களாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன்.
என் போன்றவர்களின் கண்களில் திரு மு.க. ஸ்டாலின், இந்த இயக்கத்தின் சரித்திரத்தில் முக்கியமான மைல் கல்லாக காட்சி அளிக்கிறார்.
அரசியல் பதவிகள், ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெருந்தகுதி அவருக்கு இருப்பது எங்களைப் போன்ற பாமரர்களின் கண்களுக்கு நன்றாகவே தென்படுகிறது.
இந்த தகுதியை அவர் செவ்வனே தமிழகத்திற்காக பயன்படுத்துவார் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

கமலஹாசன்

அய்யாவின் அஞ்ஞாமை;
அண்ணாவின் அயராமை;
பேராசிரியரின் பிறழாமை;
கலைஞரின் கலங்காமை;
இங்கு இந்த – நாலின் கலவைதான் ஸ்டாலின் !

கவிஞர் – வாலி
stalin

stalin

முகத்தில் இளமை வாக்கில் இனிமை பார்வையில் கனிவு பழக்கத்தில் பணிவு தோற்றத்தில் எளிமை தொண்டில் அடக்கம் கொள்கையில் அழுத்தம் செயலில் வேகம் இந்த தோற்றத்தோடு ஒரு இளம் வாலிபர் நாளெல்லாம் நாடெல்லாம் வலம் வருகிறாரே !

அவருக்கா.. அந்த தளபதி மு.க. ஸ்டாலினுக்கா மணிவிழா ! அதற்குள் ஆண்டு அறுபது ஆகி விட்டதா ?

ஆச்சரியமாக இருக்கிறதே ! ஏடும் எழுத்தாணியும் கொண்டு பள்ளிக்குப் போகும் முன்பே கழக கொடியை கையிலேந்தி நின்ற பிள்ளை !

கல்லூரிக் காளையாகும் முன்பே இளைஞர் அணியை கண்ட பிள்ளை!

முகத்தில் மீசை அரும்பும் முன்னே அரிதாரம் பூசி நாடெல்லாம் நாடகத்தில் நடித்து கழகம் வளர்த்த பிள்ளை !

இப்படி பாலகனாக நான் பார்த்த பிள்ளை இன்று ஆளாகி, தலைவர் கலைஞரின் பாரம் தாங்க அவருக்கு தோளாகி சிறை சென்ற தியாகியாகி அங்கே சித்திரவதைகளை தாங்கியவன் என்ற பேராகி, இளைஞர் அணியை இயக்கத்திற்கோர் அமைப்பாகி, அதை செயல்படுத்த அதன் செயலாளராகி, கழகத்திற்கு துணைப் பொதுச் செயலாளராகி, பொருளாளருமாகி நாளை.. நம் இயக்கத்தையும், நம் நாட்டையும்,வழி நடத்தத் தலைமை தாங்குகின்ற தகுதியோடு நிற்கின்ற தளபதி மு.க.ஸ்டாலினுக்கு மணிவிழா ! பகலெல்லாம் சுற்றுப் பயணம் இரவானால் பொதுக் கூட்டம் உட்கார்ந்தால் உடன் பிறப்புகளோடு உரையாடல் நடந்தால் மக்கள் வெள்ளத்தில் நீச்சல் இப்படி இருபத்தி நாலு மணி நேரமும் சுற்றுவதில் பம்பரத்தைத் தோற்கடித்து விட்டு சூறாவளியோ என வியக்கும் வண்ணம் சுற்றி வரும் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு மணிவிழா ! அறுபது வயது அனுபவ முதிர்ச்சி,
தலைவர் கலைஞரின் பயிற்சி, படித்ததால் பெற்ற அறிவு, பழக்கத்தால் ஏற்பட்ட தெளிவு, வெற்றி தோல்விகளின் அனுபவம், நிர்வாகத்தில் கற்ற பாடம், எதிரிகளின் வியூகம் – அதை முறியடித்துக் காட்டிய விவேகம், அரசியல் சதுரங்கத்தின் தில்லு முல்லு, மேடைப் பேச்சின் சக்தி, மக்களின் மன நிலை அறிந்திடும் திறன், சட்டமன்ற விவாத போர் முறைகள், இத்தனையும் இந்த அறுபது ஆண்டுக்குள் ஒருங்கே பெற்று அனுபவ – அறிவுப் பெட்டகமாகத் திகழும் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு மணிவிழா !

மணிவிழா மட்டுமா ? பவளவிழா ! முத்துவிழா ! நூற்றாண்டு விழா ! என பல விழாக்கள் தளபதியின்
வாழ்வில் வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த விழாவிற்கெல்லாம் முன்னால் இந்நாட்டை வாழவைக்க வந்தவர் தளபதி ஸ்டாலின் என்று
தமிழ்நாட்டு மக்கள் ஓர் விழாவை விரைவில் எடுக்க வேண்டும் என்ற என் ஆசையோடு பல்லாண்டு நீர் வாழ்க 1
எந்நாளும் நின் பெயர் நிலைக்கட்டும் வரலாற்றில் என வாழ்த்துகிறேன் !

கழகத் துணைப் பொதுச் செயலாளர் – திரு. துரைமுருகன்

தமிழகத்தை ஆள்வதற்கு மக்கள் தி.மு.க.வை மீண்டும் தேர்ந்தெடுப்பார்களேயானால், தி.மு.க.வின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன்.
மேயராக மாநகர் முழுவதும் நேரடியாக, தானே களத்திற்குச் சென்று பிரச்சினைகளைத் தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகள், அவர் ஒரு நல்ல நிர்வாகியாக வருவார் என்ற நம்பிக்கையை நடுத்தர வர்க்கத்திற்கு ஏற்படுத்தியது.
விரோதத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் போக்கு ஸ்டாலினிடம் இல்லை. ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேச அவர் தயங்கியதே இல்லை. இந்த ஆரோக்கியமான அணுகுமுறை கலைஞர் கருணாநிதி – செல்வி ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு எதிர்காலத்தில் ஸ்டாலினால் முழுமையாக மீட்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

பத்திரிக்கையாளர் ஞாநி
stalin

stalin

ஸ்டாலின் என்கிற இந்தத் தலைவரை 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவேன். அவர் இளைஞராக, கல்வி கற்றபோதிலிருந்தே அவரைத் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறவன்.

அவர் இளைஞராகக் கல்வி கற்று, அதற்குப் பிறகு கலைத்துறையிலே நடிகராக நுழைந்து, பிறகு திராவிட இயக்கத்தின் தொண்டராகத் தன்னை மாற்றிக் கொண்டு, அதற்காகப் பல தொண்டுகளை நிறைவேற்றுகிற வகையில் மேடைகளை அமைத்து, தலைவர்களை வரவழைத்து, கூட்டம் நடத்தி, மேடை நாடகங்களை நடத்தி, திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புகிற ஆற்றல் மிக்க இளம் தொண்டராக விளங்கிய காலத்திலும் பார்த்திருக்கிறேன்.

அதற்குப் பிறகு அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தொண்டர்களில் தலைசிறந்த தொண்டராக விளங்கி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு மாபெரும் பாதுகாப்புப் படையப் போன்ற இளைஞர்களைக் கொண்ட இளைஞரணி என்பதை, தலைவர் கலைஞருடைய அனுமதியோடு உருவாக்கி, இன்று நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக கழகத்தின் கிளையாக மட்டுமல்ல.. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பையும் அவர் ஏற்க இருக்கிறார். ஆற்றல் மிகு இளைஞர் அணிக்குத் தலைவராக விளங்குகிறார் நம்முடைய ஸ்டாலின். அவர் சட்டமன்ற உறுப்பினராக பலமுறை வென்றிருக்கிறார். சென்னை மா நகராட்சி மேயராக இரண்டு முறை பொறுப்பேற்று இருக்கிறார்.

சென்ற முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது இவருடைய எதிர்காலத்தை அடையாளம் காட்டுகிற வகையில், முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் “ தளபதி “ ஸ்டாலினைத் துணை முதலமைச்சர் ஆக்கினார்.

இன்றைக்கு இவ்வளவு பொறுப்புகளோடு வளர்ந்து கொண்டிருக்கிற ஸ்டாலின் அவர்கள், எல்லாச் சிறப்புப் பெயர்களையும் தாண்டி அவரை “ தளபதி “ என்று அழைக்கப்படுவதே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாகும். காரணம், திராவிட இயக்கம் தொடங்கிய நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் திராவிடர் இயக்கம் பல பெயர்களிலே அழைக்கப்பட்ட போது திராவிடர் கழகமாக அது விளங்கியபோது அன்றைக்கு ஒருவரை “ தளபதி “ என்று தமிழ்ச் சமுதாயம் அழைத்தது. அப்படி அழைக்கப்பட்டவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர் – தந்தை பெரியாரோடு இணைந்து தமிழர்களுக்குப் பாடுபட்டு “ தமிழ் நாடு” என்று பெயரிட்டு அழைத்தவர் – தமிழர்களுக்கு வழிகாட்டியாகவும் மாபெரும் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்தான் திராவிட இயக்க வரலாற்றில் ‘ தளபதி ‘ என்று அழைக்கப்பட்டவர்.

அண்ணாவை அழைத்ததற்குப் பிறகு, திராவிடர் இயக்கத்தின் வடிவமாகத் திகழ்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னணித் தலைவராக விளங்குகிற மு.க. ஸ்டாலின் அவர்களை ‘ தளபதி ‘ என்று அழைத்து மகிழ்கிறோம்.

ஆகவே அவர் பெற்றிருக்கிற சிறப்புகள், பெருமைகள், பதவிகள் இவை எல்லாவற்றையும் விட தளபதி ஸ்டாலின் என்று அழைப்பதுதான் அவருடைய வரலாற்றில், அரசியல் துறையில், சமுதாயத் துறையில், இயக்க வளர்ச்சியில் அவர் ஆற்றிக் கொண்டு வருகிற தொண்டிற்கு என்றைக்கும் நிலைத்து நிற்கிற சிறப்புக்குரிய பட்டமாகும்.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், நாள்தோறும் அவர் இயக்கத்தை நடத்துவதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தாலும், ‘ முரசொலி ‘ பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும், அவர் காலத்திலேயே வளரும் தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்களைப் பார்த்து மகிழ்கிற உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறவர் கலைஞர் என்றால் அதற்காக தமிழகம் பெருமைப் படுகிறது.

இந்த வயதில் பல சிறப்புகளை தளபதி ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்றால், பல பெருமைகளைப் பெற்றிருக்கிறார் என்றால், இவைகளை எல்லாம் இவருடைய உழைப்பிற்காக, தகுதிக்காகக் கிடைத்த பெருமைகளே தவிர, யாரும் தானமாக வழங்கியதில்ல. இதை நான் சொல்வதற்குக் காரணம், இவ்வளவு பெருமைகளை, ‘ கலைஞருடைய மகன் ‘ என்பதனாலே கலைஞர் வழங்கிய சிறப்புகள் என்று பலரும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் சொற்களில் உள் நோக்கம் இருக்கிறதே தவிர உண்மை இல்லை.

கலைஞர் குடும்பத்திலே பிறந்த காரணத்தினால் அவர் பெருமைப்படுத்தப் படுகிறார் என்று சிலர் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் 40 ஆண்டுகாலம் அவரைத் தொடர்ந்து கவனித்தவன் என் கிற உரிமையோடும், திராவிட இயக்கத்தின் பழைய தொண்டர்களுள் ஒருவன் என் கிற உணர்வோடும், திராவிட இயக்க வளர்ச்சியில் பல தலைவர்களைப் பார்த்தவன் என் கிற உரிமையோடும் சொல்கிறேன். “ ஒரு தலைவர்.. தொண்டனாக இருந்து உழைத்து உயர்ந்து இந்த அளவிற்கு பெருமை பெற்று பொறுப்புகளை ஏற்று வளர்ந்திருக்கிறவர் தளபதி ஸ்டாலின் என்றால் அது மிகையாகாது. கலைஞருடைய மகன் என் கிற சிறப்பினால், பெற்ற் தானமல்ல. அவருடைய உழைப்பினாலே கலைஞரே மறுக்க முடியாமல் வழங்கிய பெருமையாகும்.

அவருடைய எதிர்காலத்தை யாரும் தடுக்கவும் முடியாது. அவர் நாள்தோறும் சுற்றுப் பயணம் செய்து இந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக தொண்டு செய்து இவ்வளவு சிறப்புக்களையும் பெற்றுள்ளார்.

அவருக்கு 61-ம் ஆண்டு காலம் அவரோடு தொடர்ந்து அவருடைய வளர்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்து வருகிற ஒரு சகோதனாக நான் உணர்கிறேன். அவர் தமிழகத்தின் எதிர்காலத்தை உருவாக்குகிற பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிற முத்தமிழறிஞர் கலைஞரும், பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் விதைத்து வளர்ந்த அந்த திராவிட மரத்தை பாதுகாக்குகிறவராக, பொறுப்பேற்றுக் கொள்கிற திறமையும் ஆற்றலையும் படைத்த ஸ்டாலின் அவர்கள் இன்னும் பல சிறப்புக்களைப் பெறுவார்.

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் – இராம. வீரப்பன்

முற்போக்குச் சிந்தனைகளும், அச்சிந்தனைத் திரட்டுகளை செயல்படுத்தும் ஆற்றலும், திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

சமுதாய சமதர்மம் நிலைத்திடவும், சமூக நீதி காத்திடவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சமுதாயக் காவலர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

“இவன் தந்தை எந்நோற்றான் கொல்லெனும் சொல்”

எனும் திருவள்ளுவரின் திருவாக்கினை மெய்ப்படுத்தியத் திருமகன் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

அரசியலுக்கு அப்பால், கலை உணர்வால், அன்பால் கட்டுண்டவர்கள் பெரியப்பா டாக்டர் கலைஞரும், அப்பா நடிகர் திலகமும் என்பது உலகறிந்த உண்மை.

அந்த உறவு என்றென்றும் தலைமுறை கடந்து தழைத்து நிற்கும் என்பது உறுதி !

திரைப்பட நடிகர் – திரு. ஜி. பிரபு
stalin

stalin

மேயர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள, சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சென்னை மாநகராசிப் பள்ளிகளில், கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு, மேயர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சார் – மாண்புமிகு சி. சுப்பிரமணியம்

திரு மு.க.ஸ்டாலின் அவருடைய தந்தை மு.கருணாநிதியை போலவே திறமை மிக்கவர். ரஷ்யப் புரட்சித் தலைவர் ஸ்டாலினின் பெயரே, அவருக்கும் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யத் தலைவர் ஸ்டாலின், ரஷ்யாவில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்தது போலவே, மு.க. ஸ்டாலினும், அரசியலில் மிக உயர்ந்த நிலையை அடைந்து தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் புரட்சிகரமான பணிகளைச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

முன்னாள் துணைப் பிரதமர் – பாபு ஜெகஜீவன்ராம்
stalin

stalin

கலைகளின் மீது தீராத பற்றும், நீண்ட பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவரும், நிர்வாகத் திறன் மிக்கவருமான டாக்டர் மு.க.ஸ்டாலின், தனது நீண்ட அனுபவத்தின் மூலம் சமூகத்தின் கலாச்சாரங்களை அறிந்து கொண்டுள்ளதுடன், சாதாரண பொது மக்களுக்கானத் தேவைகளை நன்கு அறிந்து, அவற்றை அவர்கள் சிரமமில்லாமல் அடைவதற்கான அனைத்து வழிகளையும் ஏற்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கு உதவி வருகிறார்.

மஹாராஷ்ட்ர மாநில முதல்வர் – மாண்புமிகு பிரித்திவிராஜ் சவான்

மு.க.ஸ்டாலினின் இலக்கு, அர்ப்பணிப்பு மற்றும் அவற்றை அடைவதற்கான தொடர் முயற்சிகள் ஆகியவை தமிழ்நாட்டு பொதுமக்களுக்கு வரும் காலங்களில் பெரும் நன்மையை உண்டாக்கப் போகின்றன என்பதில் சந்தேகமில்லை.

பாராளுமன்ற நிதி நிர்வாகக் குழுத் தலைவர் – யஷ்வந்த் சின்ஹா
stalin

stalin

தி.மு.க.வின் பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.மு.க.ஸ்டாலின் பழகுவதற்கு இனிமையானவர். யாரும் எளிதில் அணுகக் கூடியவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் – ஜி. ராமகிருஷ்ணன்