திருச்சி | 20/03/2016 |


திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் “சமூக நீதி மாநாடு” நடைபெற்றது. இந்த  மாநாட்டில் தளபதி மு.க.ஸ்டாலின்  கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார். மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கங்களின் இலட்சியங்களை விவரித்தும்,  சமூக நீதி,  பெண்ணுரிமை,  தொழில் மற்றும்  கல்வி வளர்ச்சிகள்  ஆகியவற்றிற்காக  திராவிட இயக்கங்கள் ஆற்றிய அரும்பணிகளையும் பற்றி  விளக்கிப் பேசினார். திமுக ஆட்சியில், தலைவர் கலைஞரால்  நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம், சுயமரியாதை திருமண சட்டம், பெண்களுக்கும்  அரசில்  வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டது என்றும் நினைவுப்படுத்தினார். மேலும், பெண்களுக்காக உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதும், சமூக நல்லிணக்கத்திற்கு பெரியார் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டதும் போன்ற  பல்வேறு திட்டங்கள் பற்றி சமூக நீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின்  எடுத்துரைத்தார்.  சமூக நீதிக்காக திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று என்றும் இணைந்து பணியாற்றும் என்று மு.க.ஸ்டாலின் தீர்மானம் அளித்தார்.


செய்திகளை பகிர்ந்து :