சென்னை | 14/03/2016 |


தங்கத்தின் மீதான் ஒரு சதவீத கலால் வரியை திரும்பப் பெறக் கோரிய நகை வியாபாரிகளின் கோரிக்கைக்கு தளபதி மு.க.ஸ்டாலின் தன்னுடைய முழு ஆதரவையும் அளித்துள்ளார். மத்திய அரசின் 2016 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் தங்க நகைக்கு 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டது. இதனை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இந்த அறிவிப்பை இரத்து செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. ஏற்கனவே தங்கத்திற்கு 10 சதவீத இறக்குமதி வரியும் ஒரு சதவீத வாட் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்க நகைக்கு ஒரு சதவீத கலால் வரி என்று தற்போது மத்திய அரசு தாக்கல் செய்து அறிவித்திருப்பது அவர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடும். அதுமட்டுமின்றி பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கானோரை பாதிக்கும் இந்த கலால் வரி விதிப்பு பற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை மத்திய அரசிற்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தங்க நகைகள் மீதான் கலால் வரித்தில் எதிர்மறை விளைவை ஏர்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எனவே, மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி அவர்கள் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, இலட்சக்கணக்கான வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கலால் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 


செய்திகளை பகிர்ந்து :