சட்டமன்ற உறுப்பினர்

ஒருவர் கொடுக்கப்பட்ட தலைமை பதவிக்கான பணியை கடமையாக நிறைவேற்றுவார்கள். ஆனால் திரு.ஸ்டாலின் அவர்கள் மக்களின் சேவையை தனதாக்கி, கட்சியின் கொள்கைகளையும் அதன் முதன்மையான இலக்கையும், கட்டமைப்பையும் கடைபிடித்து தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணிபுரிந்தார்.

மேலும் படிக்க
MK Stalin

MK Stalin

உள்ளாட்சித்துறை அமைச்சராக

மக்களுக்கு இவரை இளைய தலைமுறையின் சின்னமாகவும் இளைய தளபதியாகவும், மட்டுமே தெரியும்.

1996 ஆம் ஆண்டில் சென்னை மேயராக பணியாற்றியபோது இவரது சிறப்பான பணிகளால் பெரிதும் கவரப்பட்ட மக்கள் இவரை “மாநகரத் தந்தை” என குறிப்பிடலாயினர். குப்பைகள் அகற்றுவதை தனியார்மயமாக்கினார். பொதுபோக்குவரத்து அமைப்பை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டார். சிறிய மற்றும் பெரும் மேம்பாலங்களை கட்டினார். மேயர் பதவி அவரை கட்சியின் திட்டமிட்ட செயல்வீரராகக் காட்டியது. மேலும், படித்த நடுத்தர மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். தி.மு.க.விற்கு இவரது எழுச்சியினாலும், அர்ப்பணிப்பாலும், உண்மையான உழைப்பாலும் நல்லதொரு தலைவரின் வருகையை உணர்த்தியது.

மேலும் படிக்க

மேயர்

சென்னை மாநகராட்சி 323 ஆண்டு வரலாற்றை கொண்ட மாபெரும் உள்ளாட்சி அமைப்பாகும். 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் நாள் துவக்கப்பட்டது. மாநகராட்சியின் தலைவர் மேயர் எனப்படுபவர், அந்நகரின் முதல் குடிமகனாகக் கருதப்படுவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த மாநகராட்சியின் மேயர் பதவிக்கு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 1996 ஆம் ஆண்டு மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் நடைபெற்ற மேயர் தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றி சென்னை மக்கள் அவர் மீது கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

மேலும் படிக்க
MK Stalin

MK Stalin

துணை முதலமைச்சராக

தமிழக வரலாற்றில் முதல் முறையாக துணை முதலமைச்சர் பதவி வகித்தவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். இவரது பதவிக்காலம் 29.5.2009 முதல் 15.5.2011 வரை.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த சமயத்தில் மக்களின் தேவைகளை அறிந்து பொறுப்புகளை ஏற்று நிர்வகிக்ககூடியவர் தேவையானது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியில் இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இயல்பாக துணை முதல்அமைச்சர் ஆனது தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையான நிகழ்வாகும்.

மேலும் படிக்க

கழகப் பொருளாளர்

2009ஆம் ஆண்டு ஜனவரியில் கழகத்தின் பொருளாளர் ஆனார் தளபதி ஸ்டாலின். கழகத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி நிதியுதவி செய்யும் பணியை மாவட்டவாரியாக மேற்கொண்டார். கழகத் தலைவர் கலைஞருக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்த காரணத்தால் 2009 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் தளபதி மு.க.ஸ்டாலினுக்குக் கூடுதலாக சேர்ந்தது. அதனைத் திறம்பட நிறைவேற்றி கழகம் தலைமையிலான அணி வெற்றி பெற காரணமாக இருந்தார்.

MK Stalin

MK Stalin

இளைஞரணி செயலாளர்

1980ல் ஜூலை 20ந் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் தலைவர் கலைஞர் அவர்களால் கழகத்தின் இளைஞர் அணி தொடங்கப்பட்டது. இந்திய அரசியலில் மாநிலக் கட்சி ஒன்று தொடங்கிய முதல் இளைஞரணி கழகத்தின் அணிதான். 1981ல் இளைஞரணி அமைப்பாளர்கள் ஐவரில் ஒருவராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

1982ஆம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கழக இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார் தளபதி மு.க.ஸ்டாலின். பின்னர் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார்.

கழகத்தின் தலைமை அலுவலகமாக இருந்த அன்பகம் கட்டடத்தை இளைஞரணியின் அலுவலகமாகப் பெறுவதற்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 லட்ச ரூபாய் நிதி திரட்டி அதனை கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனிடம் வழங்கி, அன்பகத்தை இளைஞரணியின் தலைமை அலுவலகமாக்கினார் தளபதி ஸ்டாலின்.

தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக செயலாற்றும் காலகட்டங்களில் தலைவர் கலைஞர் அறிவித்த போராட்டங்களை முன்னின்று நடத்தியதில் தளபதி தலைமையிலான இளைஞரணிக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கைத் தமிழர் நலன் காக்கும் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தும் போராட்டம் ஆகியவற்றுக்காக இளைஞரணியினர் பெருமளவில் திரண்டு போராட்டம், மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றனர்.

1988ல் சென்னையில் நடந்த தேசிய முன்னணி தொடக்க விழா, 1989ல் திருச்சியில் நடந்த மாநாடு ஆகியவற்றில் இளைஞரணி நடத்திய அணிவகுப்பு அகில இந்தியத் தலைவர்கள் பலரை வியக்க வைத்தது. அதுவரை பயன்படுத்தப்பட்ட ஊர்வலம் என்ற சொல் மாறி, பேரணி என்ற சொல் நடைமுறைக்கு வந்ததற்குக் காரணம் கழக இளைஞரணியின் ராணுவ மிடுக்கு போன்ற அணிவகுப்புதான்.

இளைஞரணியின் வெள்ளிவிழா மாநாடு 2007ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதில் நடைபெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் பள்ளி-கல்லூரி மாணவமணிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி ஆகியவை மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

30 ஆண்டுகளுக்கு மேலாக வலிமையாக செயல்படும் இளைஞரணிக்கு மேலும் வலிமை சேர்க்கும் விதத்தில் மாவட்ட-மாநில நிர்வாகிகளுக்கான வயது வரம்பை நிர்ணயித்த தளபதி மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று தகுதியான கழக இளைஞர்களை நேர்காணல் செய்து நிர்வாகிகளாகத் தேர்வு செய்தார். தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சென்னை மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் பங்கேற்று ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களை வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணியினருக்குப் பயிற்சிப் பாசறை நடத்தி கொள்கை விளக்கம் மற்றும் செயல்திட்டப் பயிற்சிகளை அளித்து வருகிறார் தளபதி மு.க.ஸ்டாலின்.

இந்தியாவில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான இளைஞரணியைப் பெற்றிருக்கும் பேரியக்கமாகத் திகழ்கிறது தி.மு.கழகம்.