கொளத்துர் தொகுதி:

தமிழ்நாட்டிலுள்ள கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி 2008ஆம் ஆண்டு தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டபோது முந்தைய புரசைவாக்கம், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து பிரித்தெடுத்து அமைக்கப்பட்டது. தற்போது அது வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

முதல் முறையாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 2011ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது தி,மு,க.வின் தளபதி மு.க்.ஸ்டாலின் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் சைதை சா.துரைசாமியை வென்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

இத்தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1.97 லட்சம். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஜனவரி 10,2011 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி இவர்களில் 99,186 பேர் ஆண்கள், 98,710 பேர் பெண்கள், 27 பேர் மற்றவர்களாவர். அப்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 195.

புவியியல்:

கொளத்தூர் தொகுதி பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியது:

  1. கொளத்தூர்
  2. பெரவள்ளூர்
  3. செந்தில் நகர்
  4. சீனிவாச நகர்
  5. அயனாவரம்
  1. பெரியார் நகர்
  2. பூம்புகார் நகர்
  3. ஜவகர் நகர்
  4. செம்பியம்

நகர்ப்புற வளர்ச்சி:

கொளத்தூர் சென்னையின் மையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வேகமாக வளர்ந்துவரும் புறநகர்ப் பகுதியாகும். உள்வட்ட சாலை கொளத்தூர் வழியாகச் செல்வதால் சென்னையில் மிகச்சிறப்பாக இணைந்துள்ள பகுதிகளில் ஒன்றாக கொளத்தூர் விளங்குகிறது. வெளியூர் பயணிகளுக்கு வில்லிவாக்கம், பெரம்பூர் ரயில் நிலையங்கள் அருகாமையில் உள்ளன, மத்திய பேருந்து நிலையம் செல்ல 15 நிமிட்த்துக்கு குறைவான நேரம்தான் ஆகும்.

உள்ளூர் பிரச்சனைகள்:

கொளத்தூர் வெள்ள பாதிப்பு எற்படக்கூடிய பகுதியாகும். குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுதல், தண்ணீர் தேங்குதல் ஆகியவை இப்பகுதியின் பிரதான பிரச்சனைகளாகும். இருப்பினும், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைத்தல், கழிவுநீர் குழாய்களை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் முயற்சிகளால் இப்பகுதியில் குறிப்பிட்த்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மோசமான சாலைகள் இத்தொகுதி மக்களின் மற்றொரு கவலையாக இருந்துவருகிறது. இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் இப்பிரச்சனைகளை எடுத்து மக்களின் நலன் கருதி பணிகளை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் மீண்டும் போடப்பட்டுள்ளன.